கோரக்கர் அருளிய சந்திரரேகை (7 நூல்கள் தொகுப்பு)
கோரக்கர் அருளிய சந்திரரேகை (7 நூல்கள் தொகுப்பு) (சந்திரரேகை 200, நமனாசத் திறவுகோல் 100, இரவிமேகலை 75, முத்தாரம் 91) உலகின் நல்லன பெருக்க இறைவன் மனித வடிவெடுப்பான் என்பது கீதையின் பொன்மொழி . இவ்வாறு உலகில் பல சித்தர்கள் தோன்றினர் . இவர்கள் மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்குப் பெருந்தொண்டுகள் செய்தனர் . இத்தகு சித்தர்கள் வரிசையில் தோன்றியவர் கோரக்கர் . இவர் தம் நூல்களில் மனித சமுதாயம் மேம்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார் . கோரக்கர் சித்தர் மற்ற சித்தர்கள் மறைபொருளாய் எழுதியவற்றையெல்லாம் இகம் - பரம் இரண்டின் இரகசியங்களையும் எளிதாய் அறிந்து பேரின்ப நிலையை அடைந்து அழிவின்றி வாழும் வகையில் அனைத்தையும் 16 நூல்களில் 8450 பாடல்களாய்ப் பதிவு செய்தார் . இதையறிந்த பிற சித்தர்கள் மறைபொருளாய் பாடியவற்றை எல்லாம் வெளிப்படையாகப் பாடி வைத்ததனால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் கூறி கோரக்கரைக் கடிந்தனர் . ஆனால் கோரக்கரோ சித்தர்களாகிய நாம் தவ வலிமையால் பெற்ற விஷயங்களை இரகசியமாய் வைத்துக் கொள்வதால் என்ன பயன் ? இவை நம்மோடு...